காயமடைந்த விஷப்பாம்புக்கு சிகிச்சை
சீர்காழி அருகே கட்டுமான பணியின் போது பிடிபட்ட காயமடைந்த விஷப்பாம்புக்கு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருவெண்காடு:
சீர்காழி அருகே கட்டுமான பணியின் போது பிடிபட்ட காயமடைந்த விஷப்பாம்புக்கு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
விஷப்பாம்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கிருத்திகா. இவரது வீட்டில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதில் குளியலறை கட்டும் பணியில் ேநற்று கட்டுமான தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனா். அப்போது அங்கு 6 அடி நீள நாகப் பாம்பு இருந்ததை கண்டு வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சீர்காழியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் வீரர் பாண்டியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்போில் அவர் சம்பவ இடத்துக்கு சென்றார். அப்போது வீட்டின் ஓரத்தில் பதுங்கி இருந்த கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பை பாண்டியன் லாவகமாக பிடித்தார்.
சிகிச்சை
அப்போது பாம்பின் உடலில் காயம் இருந்ததை கண்ட பாண்டியன் பாம்புக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தார். அதன்படி வனத்துறை அனுமதி பெற்று சீர்காழியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு 6 அடி நீள பாம்பை கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.
பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்ட பாம்பை பாண்டியன் ஒரு டப்பாவில் வைத்து அடைத்து ஆள் நடமாட்டம் இல்லாத வனப் பகுதிக்கு எடுத்து சென்று விட்டார்.