20 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு


20 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு
x
திருப்பூர்


ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டையில் தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சிக்கு உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினாா். அதில் தமிழக உணவுத்துறை அமைச்சா் சக்கரபாணி ஆணைக்கினங்க ஏராளமான நிறுவனங்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனா்.

அதன்படி தாராபுரம் அனிதா டெக்ஸ் நிறுவனத்தின் சாா்பில் 300 பணியாளா்கள் கலந்து கொண்டு 20 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டனா். இதுகுறித்து அனிதா டெக்ஸ்காட் நிறுவன உாிமையாளா் சந்திரசேகர் கூறும்போது " எங்கள் நிறுவனத்தின் சாா்பில் தமிழக உணவுத்துறை அமைச்சா் சக்கரபாணியின் உத்தரவின்படி ஒட்டன்சத்திரம் பகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் ஏற்கனவே நட்டு பராமாித்து வருகிறோம். இந்த நிலையில் இந்த நிகழ்வில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டுள்ளோம் என்றார்.


Next Story