வேரோடு வெட்டி சாய்க்கப்பட்ட மரம்
திருப்பூர்
திருமுருகன்பூண்டி நகராட்சி 13-வது வார்டு ராக்கியாபாளையத்தில் ரேசன் கடை முன்பு பழமையான பொங்கு மரம் இருந்தது. அந்த மரம் வேரோடு வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது. இதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தியபோது ராக்கியாபாளையம் கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் இயக்குனர் உத்தரவின் பேரில் இந்த மரம் வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் போக்குவரத்திற்கோ, மின்சாரத்திற்கோ எந்த வகையிலும் இடையூறாக இல்லாமல் இருந்த அந்த மரம் ஏன் வெட்டி அகற்றப்பட்டுள்ளது? அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் உரிய அனுமதியின்றி மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story