ஏற்காட்டில் மரங்கள் வெட்டிய விவகாரம்: வனவர்கள் 4 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு


ஏற்காட்டில் மரங்கள் வெட்டிய விவகாரம்: வனவர்கள் 4 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு
x

ஏற்காட்டில் மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் குறித்து வனவர்கள் 4 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது.

சேலம்

மரங்கள் வெட்டப்பட்டன

சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் வடக்கு வனச்சரக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 200-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன. இந்த மரங்கள் வெட்ட அந்த பகுதியில் உள்ள கிராம மக்களிடம் பணம் பெற்றதாக வனத்துறை அலுவலர்கள் மீது புகார் எழுந்தது.

இது குறித்து சேலம் மாவட்ட வனப்பாதுகாவலர் பெரியசாமி விளக்கம் கேட்டு சேர்வராயன் வடக்கு வனச்சரக கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு நோட்டீசு அனுப்பினார். வனச்சரக அலுவலர் பரசுராமமூர்த்தி ஏற்கனவே விளக்கம் அளித்து உள்ளார்.

விளக்கம் கேட்டு நோட்டீசு

இந்த நிலையில் மரங்கள் வெட்டிய விவகாரம் குறித்து வனவர்கள் பொன்னுசாமி, சென்னகிருஷ்ணன், ராகுல், வனக்காவலர் சுகுமார் ஆகிய 4 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளார். இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது சேர்வராயன் வடக்கு வனச்சரக பகுதியில் உள்ள ஒரு கிராமத்திற்கு குறுக்கு வழியில் சாலை அமைப்பதற்காக ஏராளமான மரங்கள்வெட்டப்பட்டு உள்ளன.

இந்த மரங்களை வெட்ட அந்த பகுதி மக்களிடம் வனத்துறை ஊழியர்கள் சிலர் பணம் பெற்றதும், அது குறித்த ஒரு வீடியோவை அந்த பகுதி பொதுமக்கள் தங்களிடம் காண்பித்து உள்ளனர். எனவே மரங்கள் வெட்ட உடந்தையாக இருந்த வன அலுவலர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினர்.


Next Story