மன்னார்குடி அருகே, அரசு பள்ளியில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நிறைவு


மன்னார்குடி அருகே, அரசு பள்ளியில்  3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நிறைவு
x

மன்னார்குடி அருகே, அரசு பள்ளியில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நிறைவடைந்துள்ளது.

திருவாரூர்

மன்னார்குடி அருகே உள்ள சேரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு வந்தன. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி அங்கு நடந்தது. நிகழ்ச்சிக்கு மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் மனோகரன் தலைமை தாங்கி மரக்கன்று நட்டார். நிகழ்ச்சியில் சேரன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சரவணகுமார், திருவாரூர் மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜப்பா, மன்னை ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், சுற்றுசூழல் அமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு மற்றும் அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story