அலையாத்தி செடிகள் நடும் நிகழ்ச்சி


அலையாத்தி செடிகள் நடும் நிகழ்ச்சி
x

அலையாத்திக்காடு வனப்பகுதியில் அலையாத்தி செடிகள் நடும் நிகழ்ச்சி நடந்தது

திருவாரூர்

முத்துப்பேட்டை;

முத்துப்பேட்டை அலையாத்திக்காடு மரவாக்காடு வனப்பகுதியில் வனத்துறை சார்பில் உலக அலையாத்திக்காடுகள் தினத்தை முன்னிட்டு அலையாத்தி செடிகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. திருச்சி மண்டல தலைமை வனப்பாதுக்காவலர் சதிஷ், திருவாரூர் மாவட்ட வன அலுவலர் அறிவொளி ஆகியோர் அறிவுறுத்தல்படி நடந்த நிகழ்ச்சியில் வனச்சரக அலுவலர் ஜனனி கலந்து கொண்டு அலையாத்தி செடிகள், தில்லை மர செடிகளை நட்டு வைத்தார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மரங்கள் இல்லாத இடங்களில் நூற்றுக்கணக்கான அலையாத்தி மற்றும் தில்லை செடிகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் வனவர் முருகானந்தம், வனக்காப்பாளர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story