12 கிராமங்களில் மரக்கன்று நடும் விழா


12 கிராமங்களில் மரக்கன்று நடும் விழா
x

சோளிங்கர் ஒன்றியத்தில் 12 கிராமங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

சோளிங்கர் ஒன்றியத்தில் 12 கிராமங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

சோளிங்கர் வருவாய் உள்வட்டத்திற்கு உட்பட்ட 22 கிராமங்களை பசுமையாக மாற்ற வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் சார்பில் திட்ட மிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக செங்கல்நத்தம், தகரகுப்பம், கேசவனாகுப்பம், செக்கடிக்குப்பம், கொடைக்கல், கல்பட்டு, புலிவலம், ரெண்டாடி, கூடலூர், பரவத்தூர், வெங்குப்பட்டு, கல்லாலங்குப்பம் ஆகிய 12 கிராமங்களில் புங்கை, வேப்பமரம், நாவல், தென்னை, பனை மரக்கன்றுகளை கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் 210 மரக்கன்றுகள் நட்டனர்.

சோளிங்கர் அடுத்த செங்கல்நத்தம் படவேட்டம்மன்‌ கோவில் குளத்தின் வளாகம் மற்றும் தகரகுப்பம் பள்ளி அருகே உள்ள குளக்கரையில் கிராம நிர்வாக அலுவலர் சானு தலைமையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒன்றியக் குழு உறுப்பினர் முனியம்மாள் பிச்சாண்டி, வேளாண்மை உதவி அலுவலர் மேகவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டனர்.


Next Story