அரசு கல்லூரி சார்பில் மரக்கன்று நடும் விழா


அரசு கல்லூரி சார்பில் மரக்கன்று நடும் விழா
x

மாதனூர் அரசு கல்லூரி சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

திருப்பத்தூர்

மாதனூர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டுநலப்பணி திட்டத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா ஆசனாம்பட்டு அரசு பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பிரேமலதா தலைமை தாங்கினார். நாட்டுநலப்பணி திட்ட அதிகாரி கோமதி வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். மேலும் மரக்கன்றுகள் நடுவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Next Story