பாப்பிரெட்டிப்பட்டி அருகே காற்றுடன் மழைக்கு 2 புளியமரங்கள் சாய்ந்தன


பாப்பிரெட்டிப்பட்டி அருகே  காற்றுடன் மழைக்கு 2 புளியமரங்கள் சாய்ந்தன
x
தினத்தந்தி 11 Dec 2022 12:15 AM IST (Updated: 11 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. அதன்படி பொம்மிடி- தென்கரைகோட்டை சாலையில் ஆலாபுரம் ஜீவாநகர் பகுதியில் காற்றுடன் மழை பெய்தபோது, அங்கிருந்த புளியமரம் வேறோடு சாய்ந்து விழுந்தது. .இதனையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் கொடுத்த தகவலின்பேரில் நெடுஞ்சாலை துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

இதேபோல் பாப்பிரெட்டிப்பட்டி அருகே நடூரில் விவசாய நிலத்தில் உள்ள புளியமரம் மழைக்கு வேரோடு சாய்ந்து விழுந்தது.


Next Story