சூறைக்காற்றில் மரங்கள் விழுந்து மின்கம்பங்கள் சேதம்


சூறைக்காற்றில் மரங்கள் விழுந்து  மின்கம்பங்கள் சேதம்
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அருமனை அருகே சூறைக்காற்றில் மரங்கள் விழுந்து மின்கம்பங்கள் சேதம்

கன்னியாகுமரி

அருமனை,

அருமனை அருகே உள்ள மலையோர பகுதியான பேணு மற்றும் வனப்பகுதிகளில் நேற்று மாலை 3 மணியளவில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள ரப்பர் மரம் முறிந்து விழுந்தன. பேணு வட்டப்பாறை ஆதி திராவிடர் பகுதியில் ரப்பர் மரங்கள் மின்கம்பங்கள் மீது முறிந்து விழுந்ததால் 2 மின்கம்பங்கள் ஒடிந்து விழுந்து சேதமடைந்தன. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மரங்களை வெட்டி அகற்றி மின்பாதைகளை சீரமைத்தனர். மரங்கள் முறிந்து விழுந்ததால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story