தேசிய மாணவர் படையினருக்கு மலையேற்ற பயிற்சி முகாம்


தேசிய மாணவர் படையினருக்கு மலையேற்ற பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேசிய மாணவர் படையினருக்கு மலையேற்ற பயிற்சி முகாம் தொடங்கியது.

நீலகிரி

வெலிங்டன்,

நீலகிரி மாவட்டத்தில் தேசிய மாணவர் படையினருக்கு (என்.சி.சி.) ஆண்டுதோறும் மலையேற்ற பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக பயிற்சி நடைபெறவில்லை. இந்தநிலையில் குன்னூர் அருகே எம்.ஆர்.சி. அவாஹில் ராணுவ முகாமில் தேசிய மாணவர் படையினருக்கு மலையேற்ற பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கோவா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 300 மாணவிகள் பங்கேற்று உள்ளனர். முகாமை தமிழக முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. வால்டர் தேவாரம் தொடங்கி வைத்து பேசினார். முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் கர்னல் சிவாராவ், கர்னல் சீனிவாஸ் மற்றும் கர்னல் பட்தாக் மற்றும் என்.சி.சி. அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்கள், பழங்குடியினர் அருங்காட்சியகம், யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவித்த மலை ரெயில் மற்றும் அருவங்காடு ரெயில் நிலையம் ஆகிய இடங்களை நேரில் பார்வையிட்டனர். மேலும் முகாமில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றனர். தேசிய மாணவர் படையினருக்கு வருகிற 3-ந் தேதி வரை நடைபெற உள்ளது.


Next Story