அரசு பள்ளியில் முப்பெரும் விழா; ராஜா எம்.எல்.ஏ. பங்கேற்பு


அரசு பள்ளியில் முப்பெரும் விழா; ராஜா எம்.எல்.ஏ. பங்கேற்பு
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே அரசு பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது. விழாவில் ராஜா எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே கூவாச்சிபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு இணைந்து நடத்திய முப்பெரும் விழா நடந்தது. நெல்லை முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி, நெல்லை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ரமேஷ் ராஜா ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்டக் கல்வி அலுவலர் ரமாதேவி, நேர்முக உதவியாளர் டைட்டஸ், நடராஜன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிவேல் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் சந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார்.

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரிசுகள் பாராட்டு சான்றிதழ், மரக்கன்றுகள் வழங்கினார். அவர் பேசுகையில், "மாணவ, மாணவிகள் தங்கள் பகுதிகளில் மரக்கன்று நடும் பழக்கத்தை இப்போதே தொடங்க வேண்டும். மரங்கள் அதிகமானால் நிலத்தடி நீர் குறைவாக உள்ள நமது பகுதியில் மரங்கள் வளரும் போது நிலத்தடி நீர் அதிகரிக்கும். எனவே மாணவ- மாணவிகள் மரங்கள் நட்டு அதனை பராமரித்து நிலத்தடி நீரை அதிகரிக்க செய்ய வேண்டும்" என்றார். ராஜா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

விழாவில் சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், வன்னிக்கோனேந்தல் பஞ்சாயத்து தலைவர் வள்ளி நாயகம், ராஜ்குமார், பாபு, மகேஸ்வரன், பேராசிரியர் சமரசம், முருகன், டாக்டர் அகஸ்டினா ஏஞ்சலின், கிருஷ்ணன், ஆசிரியர்கள் சிவராமன், கீதா, ராஜதேவி, மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் கூவாச்சிப்பட்டி நடராஜன், இளைஞரணி பசுபதி பாண்டியன், தகவல் தொழில்நுட்ப அணி வீமராஜ், மாணவரணி அஜித், வீரமணி, சுற்றுச்சூழல் அணி பிரகாஷ், நகர வார்டு செயலாளர் வீராசாமி, ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா முருகன், ஒன்றிய கழக நிர்வாகிகள் மாரியப்பன், இளைஞரணி முத்தமிழ், கவிதா பெருமாள், பிரியா, சீனிவாசன், சுந்தர், கோவில் மணி, மாரித்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story