பழங்குடியினருக்கு கடன் வழங்கும் முகாம்


பழங்குடியினருக்கு கடன் வழங்கும் முகாம்
x
தினத்தந்தி 3 Dec 2022 12:15 AM IST (Updated: 3 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் பழங்குடியினருக்கு கடன் வழங்கும் முகாம் நடந்தது.

நீலகிரி

கோத்தகிரி,

நீலகிரி மாவட்ட தொழில் மையம், ஊரக வளர்ச்சித்துறை (வாழ்ந்து காட்டுவோம் திட்டம்), தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, கோத்தகிரி பழங்குடியினர் நல அலுவலகம் சார்பில், பழங்குடியினர்களுக்கு கடன் வழங்கும் முகாம் கோத்தகிரி புயல் நிவாரண கூட அரங்கில் நடைபெற்றது. இதற்கு பழங்குடியினர் நல தனி தாசில்தார் மகேஸ்வரி தலைமை தாங்கி பேசும்போது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் புதிய தொழில் தொடங்க, வாகனம் வாங்க அரசு வங்கிகள் மூலம் மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு பயனாளிகள் தங்களது புகைப்படம், ரேஷன் அட்டை நகல், வாக்காளர் அட்டை, சாதி சான்று , வருமான சான்று, கடை வாடகை ஒப்பந்தம், வாகன கடனுக்கு ஓட்டுனர் உரிமம், பேட்ச், திட்ட அறிக்கை, மாற்று சான்று நகல், மதிப்பெண் சான்று, ஆதார் கார்டு போன்ற ஆவணங்களுடன் http://fast.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். முகாமில் கலந்துகொண்ட 150 பயனாளிகள், தங்களுக்கு சூரிய சக்தி வேலி அமைக்கவும், வீடு கட்டவும், ஆட்டோ, சரக்கு வாகனம் வாங்கவும், தையல் எந்திரம் வாங்கவும், தடுப்புச்சுவர் கட்டவும், கட்டுமான பணிக்கு தளவாட பொருட்கள் வாங்கவும் கடன் வழங்க வேண்டி விண்ணப்பித்தனர்.


Next Story