பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம்


பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம்
x

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். பொருளாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். சதீஷ், பிரகாஷ், மகாலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் பி.டில்லிபாபு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், கணியம்பாடி புதூர் கிராமத்தில் வாழ்ந்து வரும் வேட்டைக்காரன் இன மக்கள் செங்கல் சூளையில் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் அங்குள்ள செங்கல்சூளையை அதிகாரிகள் அகற்ற முற்படுகின்றனர். இதனை கண்டித்தும், சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரமேஷ் மீது பொய் வழக்குப்பதிவு செய்ததை வாபஸ் பெறக்கோரியும் கோஷங்களை எழுப்பினர். பின்னர் இதுதொடர்பாக உதவி கலெக்டர் கவிதாவிடம் மனு அளித்தனர்.


Next Story