கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி
இறந்த கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
சிவகங்கை
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்டது எம்.சூரக்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற படைத்தலைவி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த 20 ஆண்டுகளாக படைத்தலைவி அம்மன் கோவில் காளை வளர்க்கப்பட்டு வந்தது. இந்த காளை பல மஞ்சுவிரட்டு போட்டிகளில் பங்கு பெற்று காளையர்களிடம் பிடிபடாமல் வெற்றி பெற்று கிராமத்திற்கு பெருமையை தேடித்தந்தது. இந்த நிலையில் அந்த கோவில் காளை உடல் நலக்குறைவால் இறந்தது. இதனையொட்டி சூரக்குடி, செமினிபட்டி, சிலநீர்பட்டி, கோவில்பட்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து கோவில் காளைக்கு பட்டு உடுத்தி மற்றும் மாலை மரியாதை செய்து வணங்கினர். முன்னதாக 4 கிராமத்து மக்களும் கோவில் காளைக்கு பட்டு எடுத்து வந்து அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து சூரக்குடி கிராமத்தின் முக்கிய சாலை வீதி வழியாக காளையின் உடலை ஊர்வலமாக கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.
Related Tags :
Next Story