நினைவு தூணில் மலர் தூவி அஞ்சலி
தனுஷ்கோடி புயலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு தூணில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ராமேசுவரம்,
கடந்த 1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயலில் உயிரிழந்தவர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியானது நேற்று தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் நடந்தது. தனுஷ்கோடி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராமேசுவரம் நகரசபை சேர்மன் நாசர் கான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகரசபை துணை சேர்மன் பிச்சைதட்சிணாமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் கண்ணன், நகராட்சி பொறியாளர் அய்யனார் தனுஷ்கோடி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர் மறுவாழ்வு சங்க தலைவர் செல்லத்துரை, கவுன்சிலர்கள் சத்யா, முருகன், உள்ளிட்ட ஏராளமான மீனவர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு தனுஷ்கோடி தென்கடல் பகுதியில் இறங்கி நின்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அருகே உள்ள வெள்ளிவிழா நினைவுத்தூண் முன்பு நின்றும் அஞ்சலி செலுத்தினர்.