இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவிடங்களில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அஞ்சலி
இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவிடங்களில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார்.
விழுப்புரம்,
அஞ்சலி
பா.ம.க. தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பொறுப்பேற்றதில் இருந்து கட்சியை பலப்படுத்தும் வகையில் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து வருகிறார். அந்த வகையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சேலம் சென்று விட்டு சென்னை திரும்பும் வழியில் நேற்று விழுப்புரம் அருகே பனையபுரம், பாப்பனப்பட்டு, சித்தணி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு கேட்டு நடந்த போராட்டித்தின் போது உயிர் நீத்த தியாகிகளின் நினைவு தூண்கள் முன்பு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
வரவேற்பு
நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட பா.மக. செயலாளர் சிவக்குமார் எம்.எல்.ஏ., மத்திய மாவட்ட செயலாளர் பாலசக்தி, மாவட்ட தலைவர்கள் புகழேந்தி, தங்கஜோதி, மாநில வன்னியர் சங்க துணைத்தலைவர் அன்புமணி, மாவட்ட அமைப்பு செயலாளர் பழனிவேல், மாநில இளைஞர் சங்க துணைத்தலைவர் மணிமாறன், நகர செயலாளர் போஜராஜா, கோலியனூர் ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், ஞானவேல், ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜா உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக விழுப்புரம் மாவட்டம் வந்த அன்புமணி ராமதாசை பா.ம.க., வன்னியர் சங்க நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர்.