உயிரிழந்த தியாகிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாபநாசம்:
பாபநாசம் கீழவீதி, கடைவீதியில் பாபநாசம் நகர வன்னியர் சங்கம், பா.ம.க. உள்ளிட்டவை சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செய்து, அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கு பா.ம.க. வடக்கு மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலின் தலைமையில், பா.ம.க. மாவட்ட தலைவர் வக்கீல் சங்கர், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ராம்குமார், வன்னியர் சங்க மாவட்ட அமைப்பு செயலாளர் வாசுதேவன், மாவட்ட துணை செயலாளர் அழகேசன், ஒன்றிய செயலாளர் அறிவழகன், ஒன்றிய தலைவர் மனோகர், நகர செயலாளர் சுதந்திரராஜன், நகர தலைவர் ராமகிருஷ்ணன், பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர் தனவந்தராஜன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு உயிரிழந்த தியாகிகளின் உருவப் படத்திற்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும், முழக்கமிட்டும், வீரவணக்கம் செய்தும் அஞ்சலி செலுத்தினர்.இதேபோல் கபிஸ்தலத்தில் வன்னியர் சங்க இட ஒதுக்கீட்டில் உயிர் நீத்த தியாகிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பா.ம.க., வன்னியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.