பணியின் போது இறந்த போலீசாருக்கு மரியாதை


பணியின் போது இறந்த போலீசாருக்கு மரியாதை
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பணியின்போது இறந்த போலீசாருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.

திண்டுக்கல்

போலீஸ் பணியின் போது வீரமரணம் அடைந்த போலீசாருக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ந்தேதி நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நேற்று நாடு முழுவதும் உயிர்நீத்த போலீசாருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் அமைந்துள்ள நினைவு சின்னத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.


இதையொட்டி நினைவு சின்னம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் விசாகன், திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார்மீனா, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும் பணியின் போது வீரமரணம் அடைந்த போலீசாருக்கு 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.


இதேபோல் பழனியில் உள்ள பட்டாலியன் போலீஸ் படை 14-ம் அணி பள்ளியில் போலீசார் வீரவணக்க நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கமாண்டன்ட் அய்யாசாமி தலைமை தாங்கினார். துணை கமாண்டன்ட் மங்களேஸ்வரன், உதவி கமாண்டன்ட்கள் ராஜேந்திரன், சதாசிவம், வெற்றிவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் வளாக பகுதியில் உள்ள உயிர் நீத்தார் நினைவுத்தூண் முன்பு கமாண்டன்ட் அய்யாசாமி தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினர்.






Next Story