சங்கரலிங்கனார் உருவப்படத்திற்கு மரியாதை
கோவில்பட்டியில் சங்கரலிங்கனார் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
தமிழ்நாடு பெயர் வைக்கக் கோரி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாள் நேற்று கோவில்பட்டி முத்தையாமால் தெருவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி மன்றம் சார்பில் அனுசரிக்கப்பட்டது. அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முருகேச பாண்டியன், கண்ணன், ரத்தினவேல், சேகர், அரசு ராஜ், முத்துசாமி, காந்தாரி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
Related Tags :
Next Story