தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி மரியாதை
கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம்:
அகத்திய பெருமான் வைகாசி விசாகத்தில்தான் தாமிரபரணியை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் பிறந்த நாள் விழா தாமிரபரணி நல இயக்கம் சார்பில் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து 23 வருடங்களாக இந்நிகழ்ச்சியை தாமிரபரணி நல இயக்கத்தினர் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த வருடம் கருங்குளம் தாமிரபரணி ஆற்றின் கரையில் 10 மரக்கன்றுகள் நடப்பட்டது. அதனை தொடர்ந்து தாமிரபரணி நதியில் அனைவரும் வரிசையாக நின்று நதியை காக்க உறுதிமொழி எடுத்தனர். தொடர்ந்து நதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செய்துங்கநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்றார். கிராம உதயம் மேல ஆழ்வார் தோப்பு தொண்டு நிறுவனம் சார்பில் 10 மரக்கன்றுகளை நட்டு, அதற்கு கம்பி வலைகள் அமைக்கப்பட்டது. செய்துங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் மைதிலி, கிராம நிர்வாக அலுவலர் கந்தசுப்பு, கிராம உதயம் மேலாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.