சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மோட்ச தீபம் ஏற்றி வீரவணக்கம்


சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மோட்ச தீபம் ஏற்றி வீரவணக்கம்
x

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மோட்ச தீபம் ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் தேசிய கொடிகள் ஏந்தி ஊர்வலம் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் வக்கீல் அன்பழகன் முன்னிலை வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேஷ்குமார் வரவேற்றார். மாவட்ட தலைவர் சி.வாசுதேவன், மறைந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள் வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதி, காமராஜர், வேலு நாச்சியார், குயிலி, பூலித் தேவன், மருது சகோதரர்கள், எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்ட பல்வேறு தியாகிகளின் படத்திற்கு முன்பு மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டனர்.

நிகழ்ச்சியில் பொது செயலாளர்கள் கண்ணன், ஈஸ்வர், ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமானுஜம், பொதுச் செயலாளர் சரவணன், மேகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக திருப்பத்தூர் ெரயில்வே ஜங்ஷனிலிருந்து தேசியக்கொடிகளுடன் ஊர்வமாக வந்தே மாதரம் பாடலை பாடியபடி வந்தனர்.


Next Story