டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை
கீழப்புலியூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தென்காசி
தென்காசி:
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளையொட்டி, இந்திய நாடார்கள் பேரமைப்பு நிறுவன தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் வழிகாட்டுதலின்படி பேரமைப்பு சார்பில் தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் அகரகட்டு லூர்து நாடார் இனிப்பு வழங்கினார். இதைத்தொடர்ந்து கீழப்புலியூர் முப்புடாதி அம்மன் கோவிலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் இந்திய நாடார்கள் பேரமைப்பின் மத்திய மாவட்ட தலைவர் ஆனந்த் காசிராஜன், வடக்கு மாவட்ட தலைவர் சூரியபிரகாஷ், தெற்கு மாவட்ட தலைவர் ராஜா, தென்காசி நகர தலைவர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story