திருச்சி விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு


திருச்சி விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு
x

கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக திருச்சி விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருச்சி

கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக திருச்சி விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விமான நிலையம்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக தளர்த்தப்பட்டதை தொடர்ந்து தற்போது, பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதுமட்டுமின்றி திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் உணவுப் பொருட்கள், பால் பொருட்கள், காய்கறிகள், பழ வகைகள், பூ வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

மூன்றடுக்கு பாதுகாப்பு

இந்த நிலையில் கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு விமான நிலையத்திற்குள் செல்லும் பயணிகளின் வாகனங்கள் திருச்சி விமான நிலையத்தின் நுழைவு பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

அதற்கு அடுத்தபடியாக திருச்சி விமான நிலையத்தின் முனைய நுழைவு வாயிலில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயணிகளின் பயணச்சீட்டை சோதனை செய்வதுடன் இரண்டாவது முறையாக பயணிகளின் உடைமைகள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்யப்படுகிறது.

இவ்வாறு சோதனை செய்யப்பட்ட பின்பு முனையத்திற்குள் பயணிகள் உடைமைகளுடன் அனுமதிக்கப்படுகின்றனர். அதற்கு அடுத்தபடியாக மூன்றாவது கட்டமாக பயணிகளின் உடைமைகள் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்யப்படுகிறது. இந்த மூன்றடுக்கு பாதுகாப்பு பணி நிறைவு பெற்ற பின் பயணிகள் விமானத்தில் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

துப்பாக்கி ஏந்தி...

இந்த நிலையானது தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் பயணிகள் வெளிநாடுகளுக்கு விமானத்தில் பயணம் செய்வதற்கு 3 மணி நேரம் முன்னதாக வந்தால் சோதனைகள் நிறைவு பெற்று விமான நிலையத்தில் உள்ள முனையத்திற்குள் நுழைவதற்கு ஏதுவாக இருக்கும்.

இவை தவிர விமான நிலையத்தின் நுழைவுப் பகுதியில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்


Next Story