திருச்சி மாவடட செய்தி சில வரிகளில்


திருச்சி மாவடட செய்தி சில வரிகளில்
x

திருச்சி மாவடட செய்தி சில வரிகளில்

திருச்சி

6-வது நாளாக உண்ணாவிரதம்

*திருச்சி புதுக்கோட்டை சாலையில் மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கையை சேர்ந்த தமிழர்களான முரளிதரன் (வயது 28), இளங்கோ (34), லாவசந்தன் (34), புஷ்பராஜ் (43) தங்களை சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கக்கோரி கடந்த 7-ந்தேதி முதல் உண்ணவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து நேற்று 6-வது நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

வாளாடி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

*லால்குடி தாலுகா வாளாடி துணை மின்நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி, கீழப்பெருங்காவூர், வேலாயுதபுரம், தண்டாங்கோரை, வாளாடி, டி.வளவனூர், தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூர், சிறுமருதூர், மேலவாளாடி, புதுக்குடி, எசனைக்கோரை, அப்பாதுரை, கீழ்மாரிமங்கலம், அகலங்கநல்லூர், திருமங்கலம், மாந்துறை, நெய்குப்பை, ஆர்.வளவனூர், பல்லபுரம், புதூர் உத்தமனூர், வேளாண்கல்லூரி, ஆங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை லால்குடி மின்வாரிய செயற்பொறியாளர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டம்

*மணப்பாறையில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பாக சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ.7850 ஓய்வூதியம் வழங்கிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பேச்சுவார்த்தை

*வையம்பட்டியை அடுத்த குமரம்பட்டியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து வையம்பட்டி போலீசார் இரு தரப்பையும் அழைத்து பேசி திருவிழா தொடங்கியது. இந்நிலையில் நேற்று ஒரு தரப்பினர் சில காரணங்களை கூறி போலீசில் முறையிட்டனர். இதையடுத்து நேற்று இரவு மீண்டும் இரு தரப்பையும் போலீசார் அழைத்து பேசி சுமுகமாக திருவிழா நடத்திக் கொள்ள வேண்டும். மீண்டும் பிரச்சினை ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

ஒப்பாரி வைக்கும் போராட்டம்

*தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 16-வது நாளாக பாடை கட்டி ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள் ஒப்பாரி வைத்து தங்களது கோரிக்கைகளை கூறி அழுதனர்.


Next Story