நகைக்கடையில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கலாம் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு தகவல்


நகைக்கடையில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கலாம் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு தகவல்
x

நகைக்கடையில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கலாம் என்று திருச்சி பொருளாதார குற்றப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

திருச்சி

திருச்சி சின்னகடை வீதியில் இயங்கி வந்த ஆர்டிக் டைமண்டஸ் - ஜூவல்லரிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் இயங்கி வந்த நகைக்கடையில் நிர்வாக பொறுப்பில் இருந்த சச்சின் பாலகிருஷ்ணா, ஜீத்து வி மேனன், வேல்முருகன், அமலதாஸ் ஆகியோர் பொதுமக்களிடம் மாதாந்திர நகை சீட்டு நடத்தி மாதந்தோறும் ரூ.50, 100, 500 கட்டி வந்தால் 12 அல்லது 24 மாதங்களில் முதிர்வு காலத்தில் செய்கூலி அல்லது சேதாரம் இல்லாமல் நகையினை பெற்றுக்கொள்ளலாம் என்றும், பணம் செலுத்திய அந்த தேதிக்கு பணத்தினை செலுத்தும் தொகைக்கு ஏற்ப நகையினை ஒதுக்கீடு செய்வதாகவும் தெரிவித்துள்ளனர். இதை நம்பி 96 ேபர்களை மாத நகை சீட்டில் சேர்த்துள்ளனர். அந்த வகையில் அவர்கள் செலுத்திய ரூ.9 கோடியே 82 ஆயிரத்து 550 பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஸ்ரீதரன், வசந்தி, தனரேவதி, சிவமணிகண்டன் ஆகியோர் கொடுத்த புகாரில் திருச்சி மாநகர் குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மேல் விசாரணைக்காக திருச்சி பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தினர். எனவே, மேற்படி வழக்கில் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதால், ஆர்டிக் டைமன்டஸ் - ஜூவல்லரிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள் யாரேனும் இருப்பின் போலீஸ் துணை சூப்பிரண்டு பொருளாதார குற்றப்பிரிவு காஜாமலை மன்னார்புரம், திருச்சி என்ற முகவரியில் புகார் கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story