திருச்சி தேசிய கல்லூரி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா
திருச்சி தேசிய கல்லூரி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா நடைபெற்றது.
திருச்சி தேசிய கல்லூரி மேல்நிலைப்பள்ளியின் 137- வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளியின் செயலர் முனைவர் கோ. மீனா தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை செயல் அதிகாரி கு.சந்திரசேகரன், இயக்குனர் எஸ்.அபர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாணவர்கள் சிலம்பம், யோகா, கலைப்பயிற்சி, பிரமிட் போன்றவற்றை சிறப்பாக செய்து காட்டினர். திருச்சி மாநகர போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் ஜோசப் நிக்சன் பேசும்போது, ஒழுக்கம், கல்வி, விளையாட்டு ஆகிய மூன்றும் மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவதற்கு அவசியம் என்றார். பின்னர் அவர், போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் கார்த்திகேயன் விளையாட்டு விழாவிற்கான ஆண்டறிக்கை வாசித்தார். முடிவில் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சம்பத்குமார் நன்றி கூறினார்.