துப்பாக்கி சுடுதல் போட்டியில் திருச்சி என்.சி.சி. மாணவர்கள் சாதனை
துப்பாக்கி சுடுதல் போட்டியில் திருச்சி என்.சி.சி. மாணவர்கள் சாதனை படைத்தனர்.
திருச்சி
திருவனந்தபுரத்தில் என்.சி.சி. இயக்குனரகங்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து 16 குழுக்கள் கலந்து கொண்டன. இதில் திருச்சி ராக்போர்ட் என்.சி.சி. குரூப் துப்பாக்கி சுடும் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியது. இதன் மூலம் ஒட்டு மொத்த தரவரிசையில் 2-வது இடம் பெற்றது. இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் பல்வேறு கட்ட பிரிவுகளில் 2 தங்கப்பதக்கங்கள் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றது. பதக்கங்களை வென்ற வீரர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடைபெறும் சிறப்பு விழாவில் கவுரவிக்கப்படுகிறார்கள்.
Related Tags :
Next Story