திருச்சி நாடாளுமன்ற தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்க வேண்டும் மாவட்ட பொதுக்குழுவில் தீர்மானம்


திருச்சி நாடாளுமன்ற தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்க வேண்டும் மாவட்ட பொதுக்குழுவில் தீர்மானம்
x

திருச்சி நாடாளுமன்ற தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்க வேண்டும் என்று மாவட்ட பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் தேசிய மாநாடு பிரசார தொடக்க விழா திருச்சி மரக்கடையில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் எம்.ஏ.எம். நிஜாம் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் ஹபீபுர் ரஹ்மான் கருத்துரை வழங்கி, தேசிய மாநாட்டிற்கான பணிக் குழுவை அறிவிப்பு செய்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், " 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு மாநில தலைமை பெற்று தர வேண்டும். மார்ச் 10-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ள தேசிய பவள விழா மாநாட்டிற்கு திருச்சியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களை பங்கேற்கச் செய்வது, திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை மற்றும் சாலை பணிகளை விரைவாக முடித்திட வேண்டும், சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் மற்றும் நாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறுபான்மை மக்களுக்கான அரசின் உதவித்தொகை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story