திருச்சியில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது


திருச்சியில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது
x

'மாண்டஸ்' புயல் எதிரொலியாக திருச்சியில் குளிர்ந்த காற்று வீசியது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

திருச்சி

'மாண்டஸ்' புயல் எதிரொலியாக திருச்சியில் குளிர்ந்த காற்று வீசியது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

குளிர்ந்த காற்று

வங்கக்கடலில் கடந்த 5-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, 7-ந்தேதி காலையில் தீவிர காற்றழுந்த தாழ்வு மண்டலமாக நிலைக் கொண்டிருந்தது. பின்னர் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று முன்தினம் அதிகாலையில் புயலாக வலுப்பெற்றது.

இந்த புயலுக்கு 'மாண்டஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த 'மாண்டஸ்' புயல் நேற்று தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை மற்றும் மிதமான மழை பெய்தது.

குளிர்ந்த காற்று

திருச்சி மாவட்டத்தில் நேற்று சில இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. திருச்சி மாநகரில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்டது. மேலும் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதில் குழந்தைகள், பெண்கள், மற்றும் முதியவர்கள் சுவட்டர் அணிந்து கொண்டும், காதுகளை மூடியபடி துணிகளை போர்த்திக்கொண்டு செல்வதை பார்க்க முடிந்தது. அவ்வப்போது விட்டு விட்டு பெய்த தூறல் மழையால் திருச்சி மாநகரம் குளிர்ந்து காணப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மேலும் தீயணைப்பு துறை இயக்குனர் ரவி, உத்தரவின் பேரில் மண்டல துணை இயக்குனர் கல்யாண்குமார், மாவட்ட அலுவலர் அனுசியா ஆகியோர் முன்ெனச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி, ஸ்ரீரங்கம், நவல்பட்டு, லால்குடி, புள்ளம்பாடி, உப்பிலியபுரம், சமயபுரம், மணப்பாறை, துவரங்குறிச்சி, உள்ளிட்ட 9 தீயணைப்பு நிலையங்களில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதனிடையே சென்னை செல்லும் பஸ்கள் சீரான வேகத்தில் இயங்குவதற்கு போக்குவரத்து அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

மழை அளவு விவரம்

திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- சிறுகுடி1, வாத்தலை 1, மணப்பாறை 2.6, பொன்னணியாறு 2.8, கோவில்பட்டி 3.4, மருங்காபுரி 5.2, முசிறி 2.3, புலி வலம் 7, தா.பேட்டை 2, துறையூர் 1, திருச்சி ஏர்போர்ட் 0.4, திருச்சி ஜங்ஷன் 1, திருச்சி டவுன் 0.6 ஆகும்.


Related Tags :
Next Story