மாநில அளவிலான புடோகான் கராத்தே போட்டியில் திருச்சி அணியினர் அபாரம்


மாநில அளவிலான புடோகான் கராத்தே போட்டியில் திருச்சி அணியினர் அபாரம்
x

மாநில அளவிலான புடோகான் கராத்தே போட்டியில் திருச்சி அணியினர் சாதனை படைத்தனர்

திருச்சி

திருச்சியில் மாநில அளவிலான புடோகான் கராத்தே போட்டி நடந்தது. இதில் திருச்சி, கரூர், பெரம்பலூர், சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் திருச்சி அணி சார்பில் பயிற்சியாளர் ஜாக்கி எஸ்.எம். ராஜ் முகமது தலைமையில் ஜாக்கி புடோகான் கராத்தே பள்ளி வீரர்கள் கலந்து கொண்டனர். சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் கலந்து கொண்டு அவர்கள் பதக்கங்களை பெற்றனர். ஆண்கள் பிரிவில் அஸ்வின், தர்ஷன் ஸ்ரீ, சந்திர தேவ், சரண், முகமது அன்சாரி, யுகேஷ், பிரகதீஸ்வரன், தீபன், ஜஹாங்கீர், விஜய் கிருஷ்ணன், அப்துல் ராசிக், முகமது ஹாரிஸ் மற்றும் சஞ்சய் பதக்கங்களை தட்டிச் சென்றனர். இதுபோல் பெண்கள் பிரிவில் ஹாசினி, பிரிஷி மேரி, சனோபர், முஷ்பிரா பதக்கங்களை பெற்றனர். இந்த போட்டிகளின் முடிவில் அனைத்து பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்தவர்கள் தேசிய போட்டியில் விளையாட தகுதி பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கராத்தே புடோகான் பெடரேஷன் சங்க மாநில தலைவர் முருகேஷ், செயலாளர் சரவணன் ஆகியோர் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.


Next Story