தேசிய கராத்தே போட்டியில் 57 பதக்கங்களை வென்ற திருச்சி அணி


தேசிய கராத்தே போட்டியில் 57 பதக்கங்களை வென்ற திருச்சி அணி
x
திருச்சி

20-வது தேசிய கராத்தே போட்டி கோவையில் 3 நாட்கள் நடந்தது. இந்த போட்டியில் தமிழ்நாடு, ஒடிசா, மேற்குவங்காளம், தெலுங்கானா, ஐதராபாத், கர்நாடகா, கேரளா, ஜார்கண்ட் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்து 800 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகளை தமிழ்நாடு புடோகான் கராத்தே சங்க தலைவர் முருகேஷ் தொடங்கி வைத்தார். இதில் தமிழகம் சார்பில் திருச்சியை சேர்ந்த கராத்தே மாஸ்டர் ஜாக்கி ராஜ்முகமது தலைமையில் ஜாக்கி புடோகான் கராத்தே பள்ளி வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அதன்படி ஹாசினி, யுகேஷ், அஸ்வின், விஜயமாதங்கி, பிரகதீஸ்வரன், சந்திரதேவ், தர்ஷான்ஸ்ரீ, முகமதுஅன்சாரி, பிரீசிமேரி, முகமதுஹாரிஸ், தீபன், அப்துல்பைசல், ஹரிஸ், அப்துல்பகத், பராகுதீன், விக்னேஸ்வரன், ஷாருக்கான், ஜகாங்கிர்பாஷா, ராஜசேகரன், மணிகண்டன் மற்றும் விஜயகிருஷ்ணன் ஆகியோர் கத்தா, குமித்தே, குழு கட்டா, குழு குமித்தே பிரிவுகளில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றனர். அவர்கள் 17 தங்கம், 17 வெள்ளி, 23 வெண்கலம் என 57 பதக்கங்களை வென்றனர். இதில் தமிழக அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில் 57 பதக்கங்களை வென்று திருச்சி திரும்பிய வீரர்-வீராங்கனைகள் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அப்போது பயிற்சியாளர்கள் ஜாக்கி ராஜ் முகமது, ஷாஜகான், ராஜாமுகமது உடன் இருந்தனர்.


Next Story