முக்காணியில்தொழிலாளியிடம் பணம் பறிக்க முயற்சி; 3 பேருக்கு வலைவீச்சு


முக்காணியில்தொழிலாளியிடம் பணம் பறிக்க முயற்சி; 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 11 Oct 2022 12:15 AM IST (Updated: 11 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

முக்காணியில்தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலியை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி மகன் வைகுண்டராஜ் (வயது 23). கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு முக்காணி அருகே வேலை செய்துவிட்டு ஒரு வார சம்பள பணத்துடன் முக்காணி பெட்ரோல் பங்க் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை மர்மநபர்கள் 3 பேர் திடீரென வழிமறித்தனர். கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக சைரன் விளக்கு பொருத்திய வாகனம் வந்துள்ளது. இதைக் கண்டதும் போலீஸ் வாகனம் வருகிறது என நினைத்து அங்கிருந்து 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் இதுகுறித்து ஆத்தூர் போலீசில் வைகுண்டராஜ் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், பழைய காயல் கச்சேரி தெருவை சேர்ந்த சின்னத்திரை மகன் ரங்கநாதன் என்ற சாம்பார் (23), முக்காணி வடக்கு யாதவர் தெருவை சேர்ந்த வண்ணமுத்து, அதே பகுதியைச் சேர்ந்த அய்யாத்துரை மகன் மாரியப்பன் என்ற முண்டசாமி (32) என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர். குற்றச்சாட்டப்பட்டுள்ள 3 பேர் மீதும் ஏற்கனவே ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story