காரை ஏற்றி 2 போலீஸ்காரர்களை கொல்ல முயற்சி


தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே காரை ஏற்றி 2 போலீஸ்காரர்களை கொல்ல முயற்சி நடந்துள்ளது. இது தொடர்பாக கார் டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் போலீஸ் நிலையத்தில் பணி யாற்றும் போலீஸ்காரர்கள் செவல்பட்டி சிங்கராஜ் மகன் மாரீஸ்வரன் (வயது 32), சாத்தூர் சுப்பிரமணியன் மகன் வீரசிங்கம் ( 38). இவர்கள் நேற்று மாலையில் கோவில்பட்டி அருகிலுள்ள சாத்தூர் செக் போஸ்ட் முன்பு, வாகன சோதனைகள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நெல்லையில் இருந்து வந்த கார் ஒன்று சோதனையில் அவர்கல் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் காரை நிறுத்தி கைப்பற்றி, கார் டிரைவர் மூலக்கரைப் பட்டியை சேர்ந்த கந்தசாமி மகன் முத்துக்குமார் (50) என்பவரை கைது செய்தனர்.

படுகாயம் அடைந்த மாரீஸ்வரன், வீரசிங்கம் ஆகியோர் கோவில்பட்டி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் முத்துக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story