கேரளாவுக்கு கடத்த முயன்ற700 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 700 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
குளச்சல்,
குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் உத்தரவின்பேரில் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு மணவாளக்குறிச்சி, அழிக்கால், பிள்ளைத்தோப்பு ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர்.
முட்டம் சோதனைச்சாவடி பகுதியில் செல்லும்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக ஒரு சொகுசு கார் வந்தது. அதை தடுத்து நிறுத்தி சோதனை போட்டனர். அப்போது அந்த காரில் 22 பிளாஸ்டிக் கேன்களில் 700 லிட்டர் மண்எண்ணெய் இருந்தது. அது மீன்பிடி வள்ளங்களுக்கு அரசு வழங்கும் மானிய விலை மண்எண்ணெய் என்பதும் அதை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரிய வந்தது. அதை போலீசார் பறிமுதல் ெசய்தனர். அதைத்தொடர்ந்து காரை ஓட்டி வந்த சாமியார்மடத்தை சேர்ந்த ஸ்டாலின் (வயது 42) மற்றும் கிரிபிரசாத் (44) ஆகிய இருவரையும் போலீசார் பிடித்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட மண்எண்ணெய் மற்றும் பிடிபட்ட 2 பேரை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து ஸ்டாலின், கிரிபிரசாத் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.