பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி


பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி
x

அய்யலூர் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்க முயன்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்

அய்யலூர் அருகே உள்ள தங்கம்மாபட்டியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 38). இவர் திண்டுக்கல் ரெட் கிராஸ் ஆம்புலன்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அபிராமி (35). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு கணவன்-மனைவி 2 பேரும் வேலை முடிந்து ஒரு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தீத்தாகிழவனூர் பாலம் அருகே சென்றபோது, அவர்களுக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களில் ஒரு நபர் திடீரென அபிராமி கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதில் சங்கிலி அறுந்து தங்க குண்டுமணிகள் ரோட்டில் சிதறி விழுந்தன. இதை பார்த்த ராஜேஷ்குமார் அவர்களை தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ராஜேஷ்குமாரின் கையில் கத்தியால் கீறி விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.


இந்த சம்பவத்தில் காயமடைந்த ராஜேஷ்குமார் அய்யலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அபிராமி கொடுத்த புகாரின்பேரில், வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறிக்க முயன்ற 3 பேரை வலை வீசி தேடி வருகிறார்.





Next Story