சாலையோர வியாபாரிகள் 200 பேருக்கு தள்ளுவண்டி


சாலையோர வியாபாரிகள் 200 பேருக்கு தள்ளுவண்டி
x
தினத்தந்தி 8 Jan 2023 10:46 PM IST (Updated: 8 Jan 2023 11:03 PM IST)
t-max-icont-min-icon

போடி நகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகள் 200 பேருக்கு தள்ளுவண்டி வழங்கப்பட்டது.

தேனி

போடி நகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிகள் வழங்கும் விழா, நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த விழாவுக்கு நகராட்சி துணைத்தலைவர் கிருஷ்ணவேணி, நகராட்சி ஆணையர் செல்வராணி, தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கதமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமை தாங்கி, சாலையோர வியாபாரிகளுக்கு நவீன இலவச தள்ளுவண்டிகளை வழங்கினார். இதில் மொத்தம் 115 பேருக்கு தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் போடி நகர செயலாளர் புருஷோத்தமன், கிழக்கு ஒன்றிய செயலாளர் அய்யப்பன், பொதுக்குழு உறுப்பினர் சங்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Next Story