சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி
பரமக்குடியில் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி முருகேசன் எம்.எல்.ஏ.வழங்கினார்.
ராமநாதபுரம்
பரமக்குடி,
தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு விலை இல்லா தள்ளுவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் பரமக்குடி நகராட்சியில் பதிவு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 65 பேருக்கு தள்ளு வண்டிகள் வழங்கும் விழா நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. விழாவுக்கு நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் தலைமை தாங்கினார். நகராட்சி பொறியாளர் மீரா அலி முன்னிலை வகித்தார். பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, துணைத்தலைவர் குணசேகரன் ஆகியோர் வியாபாரிகளுக்கு தள்ளு வண்டிகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் தேவகிட்டு, சதீஷ்குமார், தனலெட்சுமி, துர்கா, கிருஷ்ணவேணி, முத்துக்குமார் உள்பட நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி வருவாய் ஆய்வாளர் முருகன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story