வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள்


வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள்
x

சாலையோரத்தில் கடைகள் வைப்பதற்காக சிறு வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகளை கொடைக்கானல் நகராட்சி தலைவர் வழங்கினார்.

திண்டுக்கல்

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானல் நகரின் சாலையோரத்தில் ஏராளமான வியாபாரிகள் கடைகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். சீசன் காலத்திலும், சுற்றுலா பயணிகள் அதிகம் வருகிற நேரத்திலும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கடைகளை அகற்றி வருகின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே தங்களுக்கு தள்ளுவண்டியில் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ.விடம் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதைக்கருத்தில் கொண்டு சாலையோர வியாபாரிகளுக்கு கடைகளை வழங்க கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள சிறு வியாபாரிகள் கடைகள் அமைக்க தள்ளுவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு நகராட்சி ஆணையாளர் நாராயணன் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தள்ளுவண்டிகளை வியாபாரிகளுக்கு வழங்கினர். இதில் நகராட்சி பொறியாளர் முத்துக்குமார், நகரமைப்பு அலுவலர் அப்துல் நாசர், நகர் நலஅலுவலர் அரவிந்த் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story