ஓசியில் மது கேட்டு டாஸ்மாக் கடையில் ரகளை


ஓசியில் மது கேட்டு டாஸ்மாக் கடையில் ரகளை
x
தினத்தந்தி 7 Jun 2022 12:41 AM IST (Updated: 7 Jun 2022 12:44 AM IST)
t-max-icont-min-icon

ஓசியில் மது கேட்டு டாஸ்மாக் கடையில் ரகளையில் ஈடுபட்டவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்

வேலூர்

வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று பணம் கொடுக்காமல் மதுபானம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது டாஸ்மாக் கடை விற்பனையாளர் பணம் இல்லாமல் மது பாட்டில் தரமுடியாது என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சின்னத்தம்பி, கடை முன்பு ரகளையில் ஈடுபட்டார். மேலும் ஆபாச வார்த்தைகளால் பேசி விற்பனையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னத்தம்பியை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story