கடன் தொல்லையால் அவதி: தூக்குப்போட்டு பெண் தற்கொலை
கடன் தொல்லையால் அவதியடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம். இவருடைய மனைவி வனிதா (வயது 35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தில் கடன் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவதியடைந்த வனிதா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story