சரக்கு வேன் மீது லாரி மோதி விபத்து


சரக்கு வேன் மீது லாரி மோதி விபத்து
x

சரக்கு வேன் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

கரூர்

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை காந்திபுரத்தை சேர்ந்தவர் ராமு (வயது 21). சரக்கு வேன் டிரைவர். இவர் ஒரு சரக்கு வேனில் பெட்டவாய்த்தலையில் இருந்து வாழைக்காய்களை ஏற்றி கொண்டு கேரளாவிற்கு சென்று கொண்டிருந்தார். திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மகாதானபுரம் பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, கிருஷ்ணராயபுரம் தாலுகா வீரியாபாளையம் ஊராட்சி வெள்ளாளப்பட்டியை சேர்ந்த சுரேஷ்குமார் (23) என்பவர் ஓட்டி வந்த டாரஸ் லாரி எதிர்பாராத விதமாக, எதிரே வந்த சரக்கு வேன் மீது மோதியது. இதில் சரக்கு வேன் டிரைவர் ராமு படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், லாலாபேட்டை போலீசார் லாரி டிரைவர் சுரேஷ்குமார் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story