லாரிகள் மோதல்; டிரைவர் காயம்
லாரிகள் மோதிக் கொண்டதில் டிரைவர் காயம் அடைந்தார்.
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம்:
தூத்துக்குடியில் இருந்து ஒடிசாவுக்கு ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டம் தேவராயபுரம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (வயது 36) என்பவர் ஓட்டினார். ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியாபுரம் மேம்பாலம் பகுதியில் லாரி சென்று கொண்டு இருந்த போது, பின்னால் திருச்செங்கோடு தேவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளையப்பன் (52) என்பவர் மற்றொரு லாரியை ஓட்டி வந்தார். அப்போது, திடீரென்று மணிகண்டன் ஓட்டிச் சென்ற லாரி மீது இளையப்பன் ஓட்டிச் சென்ற லாரி மோதியதாக கூறப்படுகிறது. இதில் இளையப்பன் காயம் அடைந்தார். லாரிகளும் சேதம் அடைந்தன. இதில் காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து புதியம்புத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story