லாரிகள் மோதல்; டிரைவர் பலி
லாரிகள் மோதல்; டிரைவர் பலி
தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சம்பவத்தன்று அதிகாலை திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. வல்லம் பிரிவு சாலை அருகே தஞ்சை நோக்கி மற்றொரு லாரி முன்னால் சென்று கொண்டிருந்தது. லாரியை திருவிடைமருதூரை சேர்ந்த ராஜாராம் (வயது 40) என்பவர் ஓட்டி சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரி மீது ராஜாராம் ஓட்டி சென்ற லாரி மோதியது. இதில் லாரியின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் ராஜாராம், கிளீனர் ஆகிய 2 பேரும் ஈடுபாடுகளில் சிக்கி கொண்டனர். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருந்த 2 ே்பரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜாராம் நேற்று இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.