மொபட் மீது லாரி மோதல்; தாய்-மகன் உள்பட 3 பேர் பலி


மொபட் மீது லாரி மோதல்; தாய்-மகன் உள்பட 3 பேர் பலி
x

மொபட் மீது லாரி மோதிய விபத்தில் தாய்-மகன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கடலூர்,

அரியலூர் மாவட்டம் கஞ்சமலபட்டியை சோ்ந்தவர் அருள் மனைவி செல்வி (வயது 45). இவர் தனது மகன் கோபி (22), உறவினரான இருங்களாக்குறிச்சியை சேர்ந்த ராதா மனைவி சமத்துவம் (45), இவருடைய மகன் ராஜ்குமார் (14), கொளஞ்சி மகன் வெற்றிவேல் (12) ஆகியோருடன் ஒரு மொபட்டில் கடலூர் மாவட்டம் கொடிக்களம் பகுதியில் உள்ள தனது குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார் பின்னர் அனைவரும் சாமிகும்பிட்டு விட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டனர். மொபட்டை கோபி ஓட்டினார்.

3 பேர் பலி

விருத்தாசலம்-திட்டக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கொடிக்களம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வளைவில் திரும்பியபோது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று இவர்கள் வந்த மொபட் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கோபி, சமத்துவம், ராஜ்குமார் ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். செல்வி, வெற்றிவேல் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.


Next Story