மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 2 மாணவர்கள் பலி


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 2 மாணவர்கள் பலி
x
தினத்தந்தி 31 May 2023 2:15 AM IST (Updated: 31 May 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியாகினர்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியாகினர்.

லாரி மோதியது

நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த பாய்ஸ் கம்பெனி பகுதியை சேர்ந்தவர் ரித்விக் (வயது 21). கோத்தகிரியை சேர்ந்தவர் ரிக்சன் (21). ரித்விக் ஊட்டி அருகே தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டும், ரிக்சன் 3-ம் ஆண்டும் படித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கல்லூரியில் தேர்வு நடைபெற்றது.

தேர்வு முடிந்த பின்னர் மாலை 4 மணியளவில் பிரகாசபுரம் பகுதியில் இருந்து கேத்தி பாலடா பகுதிக்கு ரித்விக், ரிக்சன் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதி்ல் மோட்டார் சைக்கிள் லாரியின் அடிப்பகுதிக்குள் சென்று விட்டது.

2 பேர் பலி

இந்த விபத்தில் ரித்விக், ரிக்சன் 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உடனே அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். இதற்கிடையே லாரியில் இருந்து டிரைவர் கீழே குதித்து தப்பி ஓடி விட்டார். தகவல் அறிந்த கேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். மேலும் அவர் யார்?, விபத்திற்கான காரணம் குறித்து அறிய அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். விபத்தில் கல்லூரி மாணவர்கள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story