மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; முன்னாள் ராணுவ வீரர் பலி
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் முன்னாள் ராணுவ வீரர் பலியானார்.
முன்னாள் ராணுவ வீரர் பலி
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ் (வயது 50). முன்னாள் ராணுவ வீரர். இவர், தனது மோட்டார் சைக்கிளில் பட்டுக்கோட்டைக்கு சென்று விட்டு புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வழியாக வல்லத்துக்கு சென்று கொண்டிருந்தார்.
புனல்குளம் அருகே வந்தபோது தஞ்சாவூரில் இருந்து வந்த லாரி எதிர்பாராதவிதமாக இருதயராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த இருதயராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வழக்குப்பதிவு
இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருதயராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த இருதயராஜின் மனைவி வல்லம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.