டிராக்டர் மீது சரக்கு வாகனம் மோதல்; பெண் பலி


டிராக்டர் மீது சரக்கு வாகனம் மோதல்; பெண் பலி
x

கொண்டலாம்பட்டி அருகே டிராக்டர் மீது சரக்கு வாகனம் மோதிக்கொண்டதில் பெண் பலியானார்.

சேலம்

கொண்டலாம்பட்டி:-

கொண்டலாம்பட்டி அருகே உள்ள பூலாவரி ஆத்துக்காட்டை சேர்ந்தவர் சின்னுசாமி. இவருடைய மனைவி சரோஜா (வயது 55). இவரும், அதே ஊரைச் சேர்ந்த கோகிலா (37), அமுதா (32), பாப்பா (50) ராஜம்மாள் (52) ஆகிய 5 பேர் தேங்காய் பாரம் ஏற்றுவதற்காக டிராக்டரில் சென்றனர். டிராக்டரை அதே பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (31) என்பவர் ஓட்டி சென்றார்.

அப்போது சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரியானூர் பாலம் இறக்கம் வழியாக டிராக்டர் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக சேலத்தில் இருந்து சென்ற சரக்கு வாகனம் எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோதியது. இதில் டிராக்டர் ரோட்டில் கவிழந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி சரோஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் கோகிலா, அமுதா, பாப்பா, ராஜம்மாள், டிரைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story