விபத்தில் சிக்கிய லாரி


விபத்தில் சிக்கிய லாரி
x

சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்தில் சிக்கியது.

கரூர்

புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து விறகு கட்டைகளை ஏற்றிக்கொண்டு திருப்பூருக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி கரூர் அருகே வெள்ளியணை தாளியாபட்டி பிரிவு சாலை பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினார்.


Next Story