லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; வியாபாரி பலி
புளியங்குடி அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
அச்சன்புதூர்:
புளியங்குடி அருகே உள்ள புன்னையாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பிச்சாண்டி கரையாளர் மகன் முத்துக்காளை (வயது 40). பால் வியாபாரியான இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் புளியங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சோலையப்பன் பண்ணை கிராமத்தை சேர்ந்த ரவி (48) என்பவர் லாரியில் புளியங்குடி நோக்கி சென்று கொண்டு இருந்தார். சொக்கம்பட்டி அருகே சென்ற போது, மோட்டார் சைக்கிள்-லாரி ேமாதிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட முத்துக்காளை பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சொக்கம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முத்துக்காைள உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.